பெப்ரவரி இறுதி வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஜீ.எல்.பீரிஸ்

#G. L. Peiris #SriLanka #UN
Reha
4 years ago
பெப்ரவரி இறுதி வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஜீ.எல்.பீரிஸ்

ஜெனிவா மனித பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெப்ரவரி இறுதி வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சில ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

சில நாடுகள் இந்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன் மேலும் சில நாடுகள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.

கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா விடயம் தொடர்பாகவும் இந்தியா வழங்கும் கடனுதவி குறித்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பேசப்படுகிறது.

 அடுத்து வரும் சில தினங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்கு செல்லவுள்ளதாக தெரியவருகிறது. இவரது இந்த விஜயம் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டெல்லியில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4