வெவ்வேறு இடங்களில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருட்கள், துப்பாக்கிகளுடன் அறுவர் வசமாக சிக்கினார்கள்!

#SriLanka #Police #Arrest
வெவ்வேறு இடங்களில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருட்கள், துப்பாக்கிகளுடன் அறுவர் வசமாக சிக்கினார்கள்!

வெவ்வேறு இடங்களில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி பாலம், நவலோகபுர, சாதம்மாவத்தை ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை, சேதுவத்த, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27, 36, 40 வயதுகளையுடைய மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுமல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் துங்கொல்ல பட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கராங்காவ பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கரங்காவ, அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31, 55 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4