சுகாதார தொழில் வல்லுநர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் இன்று தீர்மானம்.

Reha
4 years ago
சுகாதார தொழில் வல்லுநர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் இன்று தீர்மானம்.

சுகாதார தொழில் வல்லுநர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில், இன்று அந்த ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி ஆராயவுள்ளது.

சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான ஆவணம், தங்களுக்கு அவசியமாகும் என சுகாதார தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் இருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று விலகியது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அதன் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4