ஆப்ப சுத்தாவின் கஞ்சா காணி சுற்றிவளைப்பு: வெளிநாட்டு  துப்பாக்கிகளுடன் 8 சந்தேகநபர்கள் கைது

Prathees
4 years ago
ஆப்ப சுத்தாவின் கஞ்சா காணி சுற்றிவளைப்பு: வெளிநாட்டு  துப்பாக்கிகளுடன் 8 சந்தேகநபர்கள் கைது

பாரியளவான கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனமல்வில ஆப்ப சுத்தா என்பவரின் மற்றுமொரு கஞ்சா செய்கை காணியும் நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

யால வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை பகுதி, வலான மத்திய குற்றத் தடுப்பு பிரிவினால் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன், 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆப்ப சுத்தா என்பவர், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மனிதக் கொலை என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்களில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பும் பலமுறை சிறையில் இருந்த இவரது தலைமையில் பாரியளவிலான கஞ்சா சேனைகளை சுற்றிவளைப்பதற்கு வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4