புத்தளத்தில் வெள்ளை நிற கழுகை விற்பனைக்காக வளர்த்த நபரொருவர் கைது 

Prathees
4 years ago
புத்தளத்தில் வெள்ளை நிற கழுகை விற்பனைக்காக வளர்த்த நபரொருவர் கைது 

அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாலாவி இரண்டாம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே  நேற்று (12) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்துHALIEETUS LEUCOGWTER (WHITE BELLIED SEA EAGLE) இனத்தைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை நிற கழுகு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக சந்தேகநபர் வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸாரும், புத்தளம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4