மீண்டும் அதிகரித்த கொரோனா மரணங்கள்: இதுவரை 15,808 பேர் மரணம்

Prathees
4 years ago
மீண்டும் அதிகரித்த கொரோனா மரணங்கள்: இதுவரை 15,808 பேர் மரணம்

நாட்டில் நேற்றையதினம் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

20 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,808 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 08 பேரும் 30க்கு 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 290 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 595,028 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 626,966 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4