இளம் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியரும் கலந்து கொண்ட அனுராதபுர இசைநிகழ்ச்சியில் 7 பேர் கைது

Prathees
4 years ago
இளம் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியரும் கலந்து கொண்ட அனுராதபுர இசைநிகழ்ச்சியில் 7 பேர் கைது

அனுராதபுரத்தில் இணையத்தின் மூலம்  ஏற்பாடு செய்யப்பட்ட இசைநிகழ்ச்சியில்  இளம் நாடாளுமன்ற உறுப்பினர்இ மருத்துவர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இசைநிகழ்ச்சியை சுற்றிவளைத்து பல்வேறு போதைப் பொருட்களை வைத்திருந்த ஏழு சந்தேகநபர்கள் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களை சுற்றி வளைத்தபோது நாக்கின் கீழ் வைக்கும் போதை முத்திரைகள்இ போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடக பிரச்சாரங்களின்படி, 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த  விருந்தில் கலந்து கொண்டதாகவும் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது பலர் போதைப்பொருளை உட்கொண்டிருப்பதும் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இளம் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியரும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் அனுராதபுரம் தஹையாகமவில் உள்ள ஹோட்டல் அமைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 7 பேரும் நேற்று (13) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4