கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Reha
4 years ago
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இராமேஸ்வரத்தை சேர்ந்த 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த 12மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்திய போது இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்கு தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4