ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவு!

#India
Reha
2 years ago
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து கர்நாடகத்தில் உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
மேலும் பள்ளி, கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் கர்நாடகத்தில் இன்று உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. 8 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலம் பாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகளை பள்ளிகளில் விடுவதற்காக பெற்றோர்களும் வந்திருந்தனர். பள்ளிக்குள் சென்றதும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர்கள் கூறினார்கள்.

ஆனால் அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி உறுதி அளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடைபெறுகிறது. பகல் 2.30 மணி அளவில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது. இன்று அட்வகேட் ஜெனரல் பிரபு லிங்க நாவதகி அரசு தரப்பு வாதத்தை எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!