மது போதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய ஞானசாரர்: கெஞ்சிய ரதன தேரர்! பிக்குகள் அல்ல முற்றான காவிதாரிகள்: சமன் பெரேரா

Mayoorikka
4 years ago
மது போதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டிய ஞானசாரர்:  கெஞ்சிய ரதன தேரர்! பிக்குகள் அல்ல முற்றான காவிதாரிகள்:  சமன் பெரேரா

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அதிகளவில் மதுபானத்தை அருந்தி விட்டு, மது போதையில் தனது தாயை நினைவூட்டி கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அப்படியான ஒரு நபருக்கு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அத்துரலியே ரதன தேரர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவருக்கு வழங்குமாறு கோரி கெஞ்சியதாகவும் சமன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ரத்ன தேரர் எப்போதும் உண்மைகளை பேசியதில்லை. ரதன தேரர் என்னை கடத்திச் செல்லவும் முயற்சித்தார். அத்துடன் ரதன தேரர், தேச பந்து தென்னகோனுடன் இணைந்து எமது கட்சியின் செயலாளரான வேதினிகம தேரரை கடத்திச் சென்றார்.

ரதன தேரர் பெந்தோட்டையில் உள்ள எனது இல்லத்திற்கு ஞானசார தேரருடன் வந்து, மூன்று மாதங்களுக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு கெஞ்சினார்.

இவர்கள் பௌத்த பிக்குகள் அல்ல முற்றான காவிதாரிகள் எனவும் சமன் பெரேரா விமர்சித்துள்ளார்.

இன்று அதிகாலை வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தப்பட்ட, சமுதித்த சமரவிக்ரமவின் சிங்கள வலையொளி தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4