டெங்கு நோயால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

Mayoorikka
4 years ago
டெங்கு நோயால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4