முடி பராமரிப்பிற்கு வீட்டில் தயாரிக்கும் மூலிகை சீயக்காய் சீயக்காய், ஆவாரம் பூ, பன்னீர் ரோஜாவின் இதழ்கள், செம்பருத்தி இலை, மகிழம்பூ....

#Health #Hair #herbs
முடி பராமரிப்பிற்கு வீட்டில் தயாரிக்கும் மூலிகை சீயக்காய் சீயக்காய், ஆவாரம் பூ, பன்னீர் ரோஜாவின் இதழ்கள், செம்பருத்தி இலை, மகிழம்பூ....

சீயக்காய், ஆவாரம் பூ, பன்னீர் ரோஜாவின் இதழ்கள், செம்பருத்தி இலை, மகிழம்பூ, புக்கக்காய், பூலாங் கிழங்கு, பொடுதலையான் இலை, சம்பங்கி விதை, வெந்தயம்,  பாசிப்பயறு, காய்ந்த நெல்லிக்காய், வெட்டிவேர், நன்னாரி வேர் இவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. இவற்றை வாங்கி நிழலில் நன்றாகக் உலர்த்தி, அரைத்து வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.

இந்த மூலிகைத் தயாரிப்பை பயன்படுத்தினால் முடி கட்டாயம் கருமை நிறத்தில் பாதிப்பின்றி செழுமையாக வளரும். இவற்றைத் தயாரிக்க நேரமில்லை என்பவர்கள், எண்ணெய்க் குளியல் எடுப்பதற்கு முதல் நாள் இரவு தேவையான சீயக்காய், பாசிப்பயறு, வெந்தயம் மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து, அத்துடன் செம்பருத்தி இலை, பூ, நான்கு மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி குளித்தால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.

பிரச்னையின்றி முடி நன்றாக வளரும். இரண்டு முறைகளையுமே பின்பற்ற நேரமில்லை என நினைப்பவர்கள் இயற்கை மூலிகை எண்ணெய் தயாரித்து வாரம் இருமுறை அந்த எண்ணெயினை பயன்படுத்தி குளிக்கலாம்.