கிளிநொச்சியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு!
#SriLanka
#Kilinochchi
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த டிப்பர் ஒன்றின் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த டிப்பரில் சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக பயணித்த குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்தக் கோரி பொலிஸார் சமிக்ஞை செய்தும், குறித்த வாகனம் தொடர்ந்து பயணித்துள்ளது.
இந்நிலையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் டிப்பரின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்பு உள்ளானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் டிப்பரின் சாரதி அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை பிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.