வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை! பணிப்பாளரின் அறிவித்தல்

Mayoorikka
4 years ago
வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை! பணிப்பாளரின் அறிவித்தல்

யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4