ஐரோப்பாவில் இருந்து கொழும்பு தபாலகத்துக்கு வந்த பொதிகளால் சிக்கல்!

Nila
4 years ago
ஐரோப்பாவில் இருந்து கொழும்பு தபாலகத்துக்கு வந்த பொதிகளால் சிக்கல்!

ஐரோப்பிய நாடுகள் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 
மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
இந்தப் பொதிகள்  பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
 
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு போலியான முகவரியிட்டு பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் சிக்கியுள்ளன. 
 
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4