சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடித்த அடுப்பு: மட்டக்களப்பில் பூரணை தினமான இன்று சம்பவம்

Mayoorikka
4 years ago
சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடித்த அடுப்பு: மட்டக்களப்பில் பூரணை தினமான இன்று சம்பவம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமையல் எரிவாயு அடுப்பொன்று, பூரணை தினமான இன்று (16) வெடித்துள்ளது.

பிரதேச செயலக முன்வீதி அக்கரைப்பற்று 8 இல் உள்ள வீடொன்றிலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 

  “சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சத்தமொன்று உருவானதாகவும் இதன் பின்னர் குறித்த அடுப்பின் மேற்புற கண்ணாடி உடைந்து செல்வதையும் அவதானித்தேன் என, சமையலில் ஈடுபட்ட பெண்” தெரிவித்தார்.
 
ஆயினும் இச்சம்பவத்தால் வேறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4