ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாட்டுக்கு படையெடுக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகள்!

Mayoorikka
4 years ago
ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாட்டுக்கு படையெடுக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகள்!

நாட்டுக்கு நாளாந்தம் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தின் பெப்ரவரி 12ஆம் திகதிவரை அதிகளவான சுற்றுலா பயணிகள் கடந்த சனிக்கிழமையே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அன்றைய தினம் 4,677 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடம் நாளொன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகள் கடந்த டிசெம்பர் 25ஆம் திகதியே வந்துள்ளனர்.

அன்றைய தினம் 4,829 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இம்மாதத்தின் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 39,621 ஆகும்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மதிப்பீட்டின்படி, நாளொன்றுக்கு சுமார் 3,000 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4