சலூன் நடாத்தும் போர்வையில் போதைப்பொருள் வியாபாரம் செய்த இளைஞர்கள் மூவர் கைது

Prathees
4 years ago
சலூன் நடாத்தும் போர்வையில் போதைப்பொருள் வியாபாரம் செய்த இளைஞர்கள் மூவர் கைது

கெக்கிராவ பஸ் நிலையத்திற்கு அருகில் சலூன் ஒன்றை நடாத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

300,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன்  நேற்று (15ஆம் திகதி) இவர்கள் கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ, கரம்பவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இரு இளைஞர்களும், கெக்கிராவ, வலவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவருமே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, கெக்கிராவ பஸ் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரிடமிருந்தும் 15 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4