விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல பஞ்சாபி நடிகர்
#Accident
#Death
Prasu
2 years ago
விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல நடிகர்
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்படி பஞ்சாபி நடிகர் தீப் சித்து திங்கட்கிழமை காதலர் தினத்தை தனது காதலியுடன் கொண்டாடியுள்ளார்.
தீப் மற்றும் அவரது காதலி ரீனா ராய் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் படு வைரலானது.
காதலர் தினத்தை கொண்டாடிய தீப் வீடு திரும்பிய போது டெல்லி பக்கத்தில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது மரண செய்தி கேட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.