அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் மூன்று மணிநேரம் விசாரணை!

Mayoorikka
4 years ago
அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு பிரிவினரால்   மூன்று மணிநேரம் விசாரணை!

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து மூன்று மணிநேர வாக்குமூலமொன்றை வழங்கினார். 

ஏப்ரல் 21 தாக்குல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என,  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி செய்யப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, குற்றப்புலானாய்வு பிரிவுக்கு இன்று(17) அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, முற்பகல் 9.45 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த வந்திருந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்து மற்றும் ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், சட்டநடவடிக்கை எடுக்குமாறும் தாம் கோரியுள்ளதாக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடங்களை குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4