எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

Mayoorikka
4 years ago
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார்!  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 23ஆம் திகதி அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய  சந்திப்பு 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான சீர்திருத்தங்களை அடையாளம் காணும் வகையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட நாடாளுமன்ற குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4