இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிடமிருந்து 300 மெகாவொட் மின்சாரம் கொள்வனவு

Prathees
4 years ago
இலங்கை மின்சார சபைக்கு தனியார் துறையிடமிருந்து 300 மெகாவொட் மின்சாரம் கொள்வனவு

இலங்கை மின்சார சபைக்கு, தனியார் துறையிடமிருந்து 300 மெகாவொட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று முதல் தனியார்த்துறை மின்பிறப்பாக்கிகளிலிருந்து இந்த மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன இணைந்து மின்பிறப்பாக்கியை பயன்படுத்தும் முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக முனனெடுப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதியில், 70 மெகாவொட் மின்பிறப்பாக்கிகள் இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கை, எரிபொருள் பற்றாக்குறையால் நேற்றிரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்பிற்கு 280 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4