பாணின் விலை 400 ரூபாவாக அதிகரிக்கலாம்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Mayoorikka
4 years ago
பாணின் விலை 400 ரூபாவாக அதிகரிக்கலாம்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது.

அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. .

இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை 300, 400 ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது.

இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4