பிரிஜித் மக்ரோன் ஆணாக பிறந்தவர் என அவதூறு பரப்பிய இரு பெண்கள் மீது வழக்கு
Prasu
2 years ago
நாட்டின் முதல் பெண்மணி பிரிஜிக் மக்ரோன் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என அவதூறு பரப்பிய இரு பெண்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட (2021) இறுதியில் இந்த அவதூறு பரப்பப்பட்டிருந்தது. பிரிஜித் மக்ரோன் பிறப்பில் ஒரு ஆண் எனவும், அவரது பெயர் Jean-Michel Trogneux எனவும், அதன் பின்னரே அவர் பெண்ணாக மாறினார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் இரு பெண்கள் மேற்படி தகவலை பரப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த அவதூறை பரப்பிய இரு பெண்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரிஜித் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, தற்போது அவர் இருவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளார்.
முதல்கட்ட நீதிமன்ற விசாரணைகள் வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.