சுவிற்சலாந்து சட்டமும் ஒழுங்கு முறையும். கட்டாய மருத்துவக்காப்புறுதியின் நோக்கம். பாகம் - 1.

#swissnews #Law #Medical
சுவிற்சலாந்து சட்டமும் ஒழுங்கு முறையும். கட்டாய மருத்துவக்காப்புறுதியின் நோக்கம். பாகம் - 1.

சுவிட்சலாந்தில் கட்டாய மருத்துவக்காப்புறுதியின் நோக்கம்…

சுவிற்சலாந்தில் வாழும் ஒவ்வொரு நபரும் கட்டாயமாக மருத்துவ காப்புறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் நோயுற்றாலோ அல்லது தாய்மை அடைந்தாலோ அல்லது ஒரு விபத்தை சந்தித்தாலோ அதன் செலவுகளுக்கு கட்டாய மருத்துவ காப்புறுதி செய்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் மருத்துவ தேவைக்கு ஒரு சிறு பகுதியை செலுத்தும் போது மிகுதியை மருத்துவ காப்புறுதி செலுத்தும். 

ஒவ்வொரு நபரும் தனது விரும்பிய காப்புறுதி வகையை தெரிவு செய்து கொள்ளலாம். இது ஒருவரது வயது உடற்சிக்கல் நிலையில் எப்படி இருந்தாலும் கட்டாயமாக அடிப்படைக்காப்புறுதியை செய்து கொள்ள உதவும். 

அடிப்படைக்காப்புறுதி இதில் பெரும்பாலும் அனைவரும் சேரலாம். இங்கு வழமையான பற்சிகிச்சைகளுக்கு அனுமதி கிடையாது. இதனை தவிர மற்றைய முக்கிய மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் மேலதிக பணம் காப்புறுதிக்கு செலுத்துவதன் மூலம் மேலதிக சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக பற்சிகிச்சை, வைத்தியசாலையில் வசதியான அறைகளை தேர்ந்தெடுத்தல் போன்றவைகளாகும். பொதுவாக அடிப்படைக்காப்புறுதியில் நான்கு கட்டில் கொண்ட பொதுவான அறையே ஒருவருக்கு சாதாரணமாக வழங்கப்படும். 

விபத்துக்காப்புறுதி மருத்துவக்காப்புறுதியில் அடங்கும். ஒருவர் தான் தொழில் செய்யும் போது தொழில் வழங்குனரினால் விபத்துக்காப்புறுதி செய்யப்படுகிறார். அவர் தனது மருத்துவக்காப்புறுதியில் இதனை விலக்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். 

காப்புறுதிக்கட்டணமானது வருடத்திற்கு வருடம் மாறுபடும். ஒருவர் மாதம் தான் செலுத்தும் மாதாந்த காப்புறுதிக்கட்டணத்தினை இதற்கேற்ப மாற்றவேண்டும். காப்புறுதி நிறுவனத்தினால் இந்த கட்டணமாற்றம் ஒருவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும். இதன்படி நீங்கள் உங்கள் காப்புறுதியை தேவைக்கேற்றவாறு செய்து கொள்ளலாம்.

மருத்துவக்காப்புறுதி வைத்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும் காப்புறுதி அட்டை வழங்கப்படும். இதை நீங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். இவ்வட்டையை சிகிச்சைகளுக்காக காட்டி உங்கள் தேவைகளை பெற்றுக்கொள்ளலாம் .மேலதிக தகவல்களுக்கு ஓர் காப்புறுதி நிறுவனத்தில் இவற்றை கேட்டுப்பெறலாம் 

தொடரும்....

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!