குழந்தைகளுக்கும் பொருத்தமான அவித்த முட்டை சாதம் செய்வது எப்படி? | Boiled Eggs Rice Recipe !
#Cooking
#Egg
#rice
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள் :
- முட்டை - ஒன்று
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - பாதியளவு
- வேக வைத்த சாதம் - ஒன்றரை கப்
- கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்
- சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
- கொத்த மல்லித்தழை - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- கொத்த மல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
எப்படி செய்வது :
- வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.
- அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அடுத்து அதில் கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
- இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலா வுடன் நன்றாகக் கலக்கும் வரை கிளறவும்.
- வேக வைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும்
- (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறி விட்டு எடுக்க வேண்டும்). இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்த மல்லித்தழை தூவிக் கிளறவும்.