சுவிட்சலாந்து சட்டமும் ஒழுங்குமுறைகளும். சுவிட்சலாந்தில் கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தல். பாகம் - 2.
இப்போது சுவிட்சலாந்தில் கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தல் என்பது பற்றி நாம் பார்ப்போம்.
தற்போதைய சூழ் நிலையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். பொருளாதார பிரச்சினை விலைவாசி உயர்வு ஆகியவற்றால் கட்டாயமாக வேலைக்கு செல்லவேண்டிய நிலையில் உள்ளனர்.
எந்த ஒரு இடத்திலும் கணவன் மனைவி இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தால் ஒரு சில பிரச்சினைகள் எழுகின்றன. உதாரணமாக சம்பளம், பதவி உயர்வு, மரியாதை என்பன போக இதைவிட சக ஊழியர் பார்வை என்பனவும் உள்ளன.
ஆனால் ஒரு சில நல்ல விடயங்களும் உள்ளன. அதாவது ஒரு வேலைசெய்யும் இடத்தில் மனைவிக்கு பதவி உயர்வு மரியாதை ஏற்படுமானல் கணவன்மார்கள் கொஞ்சம் வருத்தம் கொள்வார்கள். அதிலும் அழகான மனைவியாக இருந்தால் மனைவியை கண்காணிப்பதே ஒரே வேலையாக இருந்து விடும். உறவில் விரிசல் ஏற்பட 90வீதம் காரணம் சந்தேகம் தான். ஒரே இடத்தில் வேலைசெய்யும் போது வேறு ஆண் ஊழியர்களுடன் மனைவி கொஞ்சம் அதிகமாக பேசினால் கூட போதும் கணவன்மார்கள் தாங்க மாட்டார்கள், சந்தேகம் கொண்டு ஒரே சிந்தனையில் முழ்கிவிடுவார்கள். அதே வேளை இருவரும் வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரே முகத்தை பார்த்த வண்ணம் இருக்க முடியாதும் அல்லவா.
ஆனால் ஒரு விடயத்தில், அதாவது போக்குவரத்து செலவு மிச்சப்படுவதோடு பிக் அப் அன்ட் ரொப் பிரச்சினை ஒன்றும் இருக்காது. அதோடு இருவரும் ஒரே இடத்தில் வேலைசெய்யும் போது கணவன் ஒரு நேரம் மனைவி ஒரு நேரம் காலை வேளையில் செல்வதென்ற பிரச்சினை எழாது.
சில வேளைகளில் மதிய உணவு சாப்பிட ஒரே இடத்தில் என்றால் அதுவும் ஒரு பிரச்சினையாக வர வாய்ப்பு உண்டு. இவற்றை சாமாளிக்க என்ன தான் செய்யலாம். சற்று சிந்தியுங்கள்.