ஈஸ்டர் குண்டுவெடிப்பின் அனைத்து ரகசியங்களும் வெளிவந்தன..! ஜனாதிபதி ஆணைக்குழுவின்  இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் 

Prathees
4 years ago
ஈஸ்டர் குண்டுவெடிப்பின் அனைத்து ரகசியங்களும் வெளிவந்தன..! ஜனாதிபதி ஆணைக்குழுவின்  இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அதற்கான ஆதாரங்கள் உட்பட அனைத்து தொகுதிகளும் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான 88 தொகுதிகளைக் கொண்ட அறிக்கை பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் இன்று (22) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 23 பெப்ரவரி 2021 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டரீதியான காரணங்களால் அது தொடர்பான ஆதாரங்களும் அடையாளங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கோப்புகள் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4