அம்மாக்கள் பெண் பிள்ளைகளுக்கு கற்றுத்தரவேண்டிய சுகாதாரமான விஷயங்களில் இதுவும் ஒன்று..
பெண் உறுப்பு மிகவும் மென்மையான பகுதி, உடலின் உள்ளுறுப்புகளில்……
சிறுநீரகப்பாதை,
மலக்குடல்,
கருப்பை வாய்
அனைத்தும் இதற்கு அருகருகில் அமர்ந்திருப்பதால் இதை கூடுதல் கவனத்துடன் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்ளவேண்டும். குறிப்பாக பருவமடைதலுக்கு பின்பு பெண்கள் தங்கள் வயதான காலத்திலும் இதை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் கிருமிகள் தொற்று உருவாவதோடு அருகில் இருக்கும் இடங்களுக்கும் அவை வேகமாக பரவக்கூடும்.
பெண் உறுப்பில் எரிச்சல், ஒருவித வாடை, சிறிய கட்டி, சிலருக்கு புண் அல்லது சிறு கொப்பளம், வலி இப்படியான பிரச்சனைகள் வருவதுண்டு. ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
இளம்பெண்கள் முதல் மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள், பிரசவத்துக்கு பின்பு கிருமித்தொற்றுக்கு உள்ளாகும் பெண்கள், மெனோபாஸ் கால வறட்சி என்று ஒவ்வொன்றையும் சந்திக்கிறார்கள்.
பெண் உறுப்பை எப்போதும் எல்லா காலங்களிலும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.?
- தினமும் இரண்டு வேளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சுத்தம் செய்யும் போது முன்னிருந்து பின்பக்கம் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கிருமிகள் உள்ளே தொற்றாது.
- நறுமணமிக்க சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலங்களில் மட்டும் கிருமி நாசினி கொண்ட சோப்புகளை பயன் படுத்துங்கள். பெண் உறுப்பை சுத்தம் செய்த பிறகு ஈரத்தோடு உள்ளாடை அணிய வேண்டாம்.
- உறவுக்கு பின் உண்டாகும் இந்த அறிகுறியை அலட்சியப்படுத்த வேண்டாம் .
- தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது. பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
- குளிக்கும் போது பெண்ணுறுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண்ணுறுப்பின் மேட்டில் சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது.
- குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பில் ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.
- சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும்.
- ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது.
- பெண்ணுறுப்பின் மேலுள்ள முடியை ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம்.முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.
- பீரியட்சின் போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.
- பெண்ணுறுப்பை இறுக்காத உள்ளாடையை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணிய வேண்டாம்.
- பெண்கள் உள்ளாடையை மூன்றுமாதத்தில்மாற்றவேண்டும்.
- உடலுறவு முடித்தபின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும்.
- தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.
- உடலுறவுக்கு பின் பெண்கள் (குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் போது) பெண் உறுப்பை சுத்தம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். பல பெண்கள் யோனி பிரச்சனை மற்றும் பால்வினை குறித்த நோய்களுக்கு காரணமாக இருப்பது உறவின் போது ஆண்களிடம் இருந்து பாக்டீரியா தொற்று பெண்களின் யோனி உறுப்புக்கு செல்வதால்தான். பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் இந்த பாதிப்புக்கு அதிகம் உள்ளாகிறார்கள். இதனால் தான் யோனிபகுதியில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் போன்ற பிரச்சனையும் அதிக வெள்ளைப்படுதலும் ஒருவித வாடையும் கூட உண்டாகிறது. அதனால் உடலுறவுக்கு பின் பெண் உறுப்பை சுத்தம் செய்வது அவசியம்.
- பெண்கள் மெனோபாஸ் காலங்களிலும் வயதான பிறகும் பெண் உறுப்பில் வறட்சி அதிகரிப்பதை உணர்வது இயல்பானது. ஆனால் இளவயதில் இந்த பிரச்சனை இருந்தால் அதற்கு காரணம் யோனியின் ஆரோக்கிய குறைபாடாக இருக்கலாம்.
- யோனியை சுத்தம் செய்ததும் ஈரம் போக துடைத்து சுத்தமான தேங்காயெண்ணெயை பயன்படுத்தலாம். இதனால் யோனியில் இருக்கும் கிருமித்தொற்றை தேங்காயெண்ணெயில் இருக்கும் ஆன்டி பங்கல் வெளியேற்றும். தினமும் இரண்டு வேளையும் கூட எண்ணெய் தடவி படுக்கலாம். இதனால் வறட்சி நீங்கும். அரிப்பு, நமைச்சல் பிரச்சனையும் இருக்காது. அதே நேரம் போதிய அளவு நீர் எடுத்துகொள்ளவும் மறக்க வேண்டாம்.
- வெள்ளைபடுதல் இயல்பானது. எல்லா பெண்களுக்கும் இருக்ககூடியது. ஆனால் அளவுக்கதிகமான வெள்ளைபடுதலால் உண்டாகும் துர்நாற்றம் எதுவுமே இல்லாமல் ஏதேனும் ஒருவித வாடையை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் முதலில் செய்யவேண்டியது இரண்டு வழிகள் தான்.
- ஒன்று பெண் உறுப்பை சுத்தமாக வைத்துகொள்வது. அடுத்தது நீர்ச்சத்து அதிகமாக உடலுக்குள் எடுத்துகொள்வது.
தொற்றை போக்க………
மிதமான நீரில் எலுமிச்சை, புதினா இலைகளை சேர்த்து நாள் முழுக்க குடித்துகொண்டே இருந்தால் அவை தொற்று இல்லாத சாதாரண வாடையாக இருந்தால் 4 நாட்களில் துர்நாற்றம் நீங்கிவிடும். வாடை இல்லை என்றாலும் அவ்வபோது நீரில் எலுமிச்சை பிழிந்து கொடுப்பது உடலுக்கும் பெண் உறுப்புக்கும் நல்லது.
தொற்று இருந்தால் பெண் உறுப்பை சுத்தம் செய்யும் போது நீரில் கல் உப்பை போட்டு கொதிக்கவைத்து மிதமான சூட்டில் கழுவி வரவேண்டும். அப்படி செய்து வந்தால் அந்த உறுப்பில் இருக்கும் தொற்று மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து இருக்கும் உறுப்பிலுள்ள கிருமிகளும் வெளியேறிவிடும்.
மற்றுமொரு முறையும் உண்டு. இதை பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் நிச்சய பலன் தரக்கூடியது. அகலமான பாத்திரத்தில் மிதமான கல் உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி அதில் பெண் உறுப்பு படும்படி பத்துநிமிடங்கள் அமர்ந்து இருக்கவேண்டும். அப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்துவந்தாலே உறுப்பில் இருக்கும் தொற்றுகள் உடனடியாக வெளியேறுவதோடு எரிச்சலும் அடங்குவதை பார்க்கலாம்
யோனியில் எரிச்சல், நமைச்சல், அரிப்பு இருக்கும் போது அதை அதிகப்படுத்தும் விதமாக கார உணவுகள், மசாலா சேர்த்த உணவுகள், இறைச்சிகள், செயற்கை சுவையூட்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். இவை மேலும் எரிச்சலை அதிகமாக்க கூடியவை.
பெண் உறுப்பில் உண்டாகும் சிறு தொற்றுகளை தானே சரி செய்துகொள்ளும் என்றாலும் அதை கெடுக்கும் விதமாக இந்த உணவுகளை எடுத்துகொள்வது பாதிப்பை அதிகமாக்கவே செய்யும்.
பழங்கள், குறிப்பாக பெர்ரி வகைகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்தவை அன்றாடம் உங்கள் உணவில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். தினமும் ஒரு கப் தயிர் அல்லது யோகர்ட் இருக்கட்டும். இதில் இருக்கும் ப்ரோபையாட்டிக் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.
பெண் உறுப்பில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் மேலும் அதிகரிக்க இவை உதவும். அதை போன்றே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
இதனோடு கண்டிப்பாக செய்ய வேண்டிய மற்றுமொரு விஷயம் ஆடை. உடல் உறுப்புகளை பாதுகாக்கும் வகையில் ஆடைகள் இருக்கவேண்டுமே தவிர அதை மேலும் பாதிப்புள்ளாக்கும் வகையில் இருக்க கூடாது. குறிப்பாக உள்ளாடைகளை சுத்தமில்லாமலோ ஈரமாகவோ அணியவே கூடாது. மெல்லிய பருத்தி ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தாலே யோனி பிரச்சனைகள் பாதி காணாமல் போய்விடும்.