பொதுவாக பல நோய்களால் வரும் வாந்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

#Health #Disease
பொதுவாக பல நோய்களால் வரும் வாந்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

குழந்தைகளுக்கு எப்போதாவது வாந்தியோடு சேர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.  பெரும்பாலும் இதற்கான காரணம் எதுவும் தெரிவதில்லை.  இரைப்பையில் அல்லது குடலில் லேசாக வலி இருக்கலாம்.  இதோடு சேர்ந்து லேசான காய்ச்சல் கூட ஏற்படலாம்.  இந்த வகையான சாதாரண வாந்தி பெரும்பாலும் ஆபத்தானவை இல்லை.  இந்த வகையான வாந்தி தானாகவே சரியாகிவிடும்.

ஆபத்தான நோய்களின் அறிகுறி வாந்தியாக இருப்பதால் அவர்களை கவனமாகப் பரிசோதிக்க வேண்டும்.  வாந்தி கீழ்கண்ட காரணங்களால் கூட ஏற்படலாம், இரைப்பையில் அல்லது குடலில் ஏற்படும் நோய்களுக்கான கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்று வலி ஏற்படுவதால், கெட்டுப்போன உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நச்சு, திடீரென ஏற்படும் கடுமையான வயிற்றுவலி, அதிகக் காய்ச்சலோடு அல்லது அதிக வயிற்றுவலியோடு கூடிய நோய்கள் வாந்தியை ஏற்படுத்தலாம்.  குறிப்பாக அதிகப்படியான  ஒற்றைத் தலைவலி, மூளைச்சவ்வு அழற்சி, காதுவலி, சிறுநீர் மண்டலத் தொற்று, பித்தப்பை வலி, மஞ்சள் காமாலை போன்றவை வாந்தியை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும்.
சாதாரண வாந்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பால் கலக்காத தேநீரில் சர்க்கரை சேர்த்துக் குடியுங்கள்.  இஞ்சி அல்லது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக்கொள்வது நல்லது.

வாந்தி கடுமையாக இருக்கும்போது சுமார் 4 மணி நேரம் எதுவும் சாப்பிடாதீர்கள்.

வாந்தியின் போது நீரிழைப்பைத் தவிர்க்க சோடா அல்லது நீர்ச்சத்து உள்ள பானத்தைஅடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கவும்.

விரைவில் வாந்தி நிற்கா விட்டால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.ஆனால் இந்த வகை மருந்துகளை 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும்)
ஆபத்தை ஏற்படுத்தும் வாந்தி

நீரிழப்பு அதிகமாவதாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மோசமான வாந்திஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது

24 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் கடுமையான வாந்தி

வாந்தியுடன் ஏற்படும் விடாத வயிற்றுவலி – குறிப்பாக ஒருவரால் மலம் கழிக்கமுடியாமல் இருக்கும்போது அல்லது உங்கள் காதுகளை அவருடைய வயிற்றில்வைத்துக் கேட்கும் இரைச்சல் ஏதும் இல்லாதபோது

குடல் புண்கள், ஈரல் சிதைவால் ஏற்படும் இரத்த வாந்தி குமுறிக்கொண்டு வரும் வாந்திகுறிப்பாக கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்திலோ மல நாற்றத்துடனோ வரும் வாந்திஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

கடுமையான வயிற்றுப்போக்கினாலும் வாந்தியினாலும் மருந்துகளை எடுத்துக் கொள்ளமுடியவில்லை என்றால் வாந்தியை கட்டுப்படுத்தும் மருந்துகளை ஊசியின் மூலம்செலுத்தி வாந்தியை கட்டுப்படுத்தலாம்.