ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் வெளியிட் தகவல்!

Soruban
4 years ago
ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில்  சுகாதார சேவை பணிப்பாளர் வெளியிட்  தகவல்!

ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் தொற்று முடிவடையும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் வைரஸ் நிலைமை முடிவுக்குவரும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரும்பாலான நாடுகளில் சுகாதார நடைமுறைகளை இலகுப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார நடைமுறைகள் இலகுவாக்கப்பட்டதை அடுத்து, பெரும்பாலான நாடுகளில் கொவிட் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான ஒரு நிலைமை இதுவரை உறுதிப்படுத்தப்படாமையினால், சுகாதார நடைமுறைகளை இலகுப்படுத்த முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், கொவிட் நிலைமையை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு காலம் விரைவில் வரும் என நம்புவதாக டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4