இஞ்சி, உள்ளி சேர்க்காத பஸ்மதி அரிசி பிரியாணி சமைப்பது பற்றிய சமையல் குறிப்பு!

#Cooking #Biryani #rice
இஞ்சி, உள்ளி சேர்க்காத பஸ்மதி அரிசி பிரியாணி சமைப்பது பற்றிய சமையல் குறிப்பு!

தேவையானவை:

  • பாசுமதி அரிசி - 2 கப்,
  • தக்காளி - 5,
  • மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் - 1,
  • உப்பு - தேவையான அளவு,
  • எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்,
  • சீரகம் - அரை டீஸ்பூன்,
  • பட்டை - ஒரு துண்டு

செய்முறை:

  1. பாசுமதி அரிசியை 3 கப் தண்ணீரில், அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
  2. குக்கரில் நெய்யைக் காய வைத்து, பட்டை, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேருங்கள். 
  3. நறுக்கிய தக்காளியை யும் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி,
  4. எலுமிச்சம்பழச் சாறு ஆகிய வற்றைச் சேர்த்து, அரிசியைத் தண்ணீருடன் சேருங்கள். 
  5. தேவையான உப்பு போட்டுக் கலந்து கொள்ளுங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
  6. விருப்பம் உள்ளவர்கள், தக்காளி வதக்கும் போது, ஒரு கை பட்டாணியை யும் சேர்த்துக் கொள்ளலாம். கலர்ஃபுல்லாக இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4