இருமலுக்கு அருமருந்தாகவும், ரத்த விருத்தியாக்கும் வெங்காயம் குறித்த குணநலன்கள்.
#Health
#Vegetable
#Benefits
Mugunthan Mugunthan
2 years ago
- சாதாரண இருமல் வந்தால், வெங்காயச் சாறுடன் மோர் கலந்து குடித்தால், இருமல் குணமாகும்.
- கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லத்தோடு கலந்து சாப்பிட்டால் நன்றாக குணம் தெரியும்.
- வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால், சாதாரண தலைவலி குணமாகும்.
- வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, தேள், குளவி போன்ற விஷ உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால், வலி குறையும்.
- உணவு எளிதாக செரிக்க, வெங்காயத்தை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.
- உடல் பருமனைக் குறைக்க, ரத்த விருத்திக்கு, ரத்த சுத்திகரிப்புக்கும் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
- உடல் சூட்டைத் தணிக்கும். நாடித்துடிப்பைச் சீராக்கும். உடல் வெப்பத்தை சமப்படுத்தும்.