தமது பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் பணிப்புறக்கணிப்பு - சுகாதார நிபுணர்கள்!

Reha
4 years ago
தமது பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் பணிப்புறக்கணிப்பு - சுகாதார நிபுணர்கள்!

தமது பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி முதல் மீண்டும் தமது தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக என சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தாம் வழங்கியிருந்த 14 நாள் அவகாசம் மார்ச் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், இதனையடுத்து மார்ச் 2ஆம் திகதி முதல் மீண்டும் பணிப்புறக்கணிபபு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் நிர்வாக சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த சம்பள முன்மொழிவு முரண்பாடுகளை அதிகரித்துள்ளதாகவும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4