சுவிட்சலாந்து சட்டமும் ஒழுங்குமுறைகளும். சுவிட்சலாந்தில் குடியுரிமை பெறல். பாகம் - 4.
சுவிட்சலாந்தில் குடியுரிமை பெறுவது சம்பந்தமாக இன்று பார்ப்போம்.
சுவிற்சலாந்தில் குடியுரிமை பெற இரண்டு வழிகள் உண்டு.
1. சாதாரண அல்லது வழக்கமான முறை.
2. எளிமைப்படுத்தப்பட்ட வழிமுறை
முதலாவதே பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தும் முறை.
இரண்டாவதில் பதியப்படாத கணவன் மனைவி சுவிஸில் கணவன் மற்றும் மனைவி திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியிருப்பதோடு குறைந்தது சுவிஸில் 5ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக ஒரு வெளிநாட்டவர் சுவிஸ் குடியுரிமை பெற 3 தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
அதாவது உள்ளுர் மட்டம், மாகாண மட்டம், மாகாண கூட்டமைப்பு மட்டம். இதில் விண்ணப்பதாரார் குறைந்தது 10வருட்ங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். அவர் தனது பதின்ம வயதில் சுவிஸில் வாழ்ந்திருந்தாலோ அல்லது சி உருமம் வைத்திருந்தாலோ அல்லது 10 வருடங்களுக்கு குறைவாக வாழ்ந்திருந்தாலோ குடியுரிமை பெற முடியும். மேலும் நீங்கள் சலுகைகளை பெற்றிருந்தால் குடியுரிமை பெற முடியாது.
மேலும் நீங்கள் கடந்த 3 ஆண்டுகள் அரசின் உதவிப்பணம் பெற்றிருந்தால் அதை மீள திருப்பி செலுத்தாமல் நீங்கள் குடியுரிமை பெற முடியாது.
நீங்கள் சுவிஸ் மாகாணம் ஒன்றில் எவ்வளவு காலம் வாழ்ந்துள்ளீர்கள் என்பது முக்கியம். இது மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும்.
சுவிஸ் குடியுரிமை பெற நல்ல மொழித்திறன் கொண்டிருக்க வேண்டும். இதுவும் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடும். ஆனாலும் இரண்டு மட்டத்திற்கு விண்ணப்பதாரர் எழுத பேச திறன் கொண்டிருக்க வேண்டும்.
மாகாணத்திற்கு மாகாணம் நீங்கள் சமூகத்துடன் எப்படி வாழ்ந்துள்ளீர்கள் என்பதுடன் நீங்கள் சுவிற்சலாந்து பற்றி எவ்வளவு துாரம் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பது தேவை. உதாரணமாக உங்கள் மாகாணத்தில் எத்தனை ஏரிகள் பொதுவிடுமுறை உள்ளுர் பாரம்பரிய விழாக்கள் என்பன பற்றி வினாக்கள் கேட்கப்படும். எது எப்படியும் எதுவும் உடனடியாக நடைபெறாது. இதற்கு எவ்வளவு ஆண்டுகளும் ஆகலாம். இதனை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
குடியுரிமை பெறுபது மிகவும் பெறுமதியானதாக இருக்கலாம்.
நீங்கள் 3தடவை அதிகாரிகளை சந்திக்க வேண்டி வருமாகையால் உங்களுக்கு 3 மட்டங்களில் பணம் அறவிடப்படும்.
மேல் மட்டத்தில் 80-150பிராங் ஆகவும் உள்ளுர் மட்டத்தில் 500-1000பிராங் ஆகவும் மாகாண மட்டத்தில் 2000பிராங் ஆகவும் இருக்கும.
இரட்டை குடியுரிமை பெறவும் சுவிஸில் அனுமதி உண்டு. சுவிஸ் மக்கள் இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருக்கலாம். இதில் உங்கள் மற்றைய நாட்டில் இரட்டை குடியுரிமை அனுமதி இருப்பின் இதில் சுவிற்சலாந்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.