INDvsSL- முதலாவது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

#Srilanka Cricket
Prasu
4 years ago
INDvsSL- முதலாவது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் இஷான் கிஷான் 89 ஓட்டங்களையும் ஷ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐய்யர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4