எரிபொருள் பிரச்சினை காரணமாக போக்குவரத்து பணிகளுக்குப் பாதிப்பு

Mayoorikka
4 years ago
எரிபொருள் பிரச்சினை காரணமாக போக்குவரத்து பணிகளுக்குப் பாதிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, பல்வேறு துறைகளின் போக்குவரத்து பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்து சேவை மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான சேவைகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளை முதல் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4