நீரிழிவு நோய் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆபத்தில் முடியும்.

#Health #Women
நீரிழிவு நோய் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆபத்தில் முடியும்.

சர்க்கரை நோய் எந்த வயதிலும் வரக்கூடும். ஆண் – பெண்களை சம அளவில் பாதிக்கும். சர்க்கரை நோயாளிகளில் ஐந்து விழுக்காட்டினர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்; 40 வயதுக்கு உட்பட்டவர்கள் சுமார் 38 விழுக்காட்டினர். உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியர்கள் தான் இளம் வயதிலேயே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு தாங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரிவதில்லை என்பதற்கு முக்கியக் காரணம். சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை என்பதால்தான்.

சர்க்கரை வியாதியின் வகைகள்

சர்க்கரை வியாதி பொதுவாக நான்கு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளது.

இவற்றை

  1. இன்சுலின் சார்ந்தது (ஐடிடிஎம்) இன்சுலின் டிபெண்டெண்ட்(டைப் 1)
  2. இன்சுலின் சாராதது (நான் இன்சுலின் டிபெண்டெண்ட்)
  3. குறைபட்ட சர்க்கரை ஏற்பு நிலை (இம்பெயர்ட் குளுக்கோஸ் டாலரன்ஸ்)
  4. கணைய வியாதி (பான்கிரியாடிக் டயாபெடிஸ்)] என்று வகைப்படுத்துவார்கள்.

இன்சுலின் சார்ந்த நிலை

கணையத்திலுள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. அதாவது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பாகங்கள் அழிந்துவிடுவதால் இது தோன்றுகிறது. இதை டைப்-1 வகை நோய் எனக் கூறுகிறார்கள்.

சிறுவர்கள் மற்றும் பதின்மர் பருவத்து விடலைகளைத் தாக்கும் இது பதினாறு வயத்துக்குட்பட்டவர்களுக்கு வரும்போது வரும்போது இளவயது சர்க்கரை நோய் ஜூவனைஸ் டயாபெடிஸ் என்று அழைக்கப்படுகிறது.

முதல் வகை சர்க்கரை நோய்

நமது உடம்பில் நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இவை நமது உடம்புக்குள் இருக்கும் கணையச் சுரப்பியை சில பல காரணங்களால் அழித்து விடுகிறது. கணையச் சுரப்பி அழிக்கப்படுவதால் உடம்பில் இன்சுலின் சாது குறைந்துவிடுகிறது. அல்லது இல்லாமல் போய்விடுகிறது. இதனால் முதல்வகை சர்க்கரை வியாதி உண்டாகிறது. இவர்களுக்கு தினமும் இன்சுலின் மருந்து தேவைப்படுகிறது. ஒரு நாள் இன்சுலின் மருந்தை நிறுத்தினாலும் உயிருக்கு அபாயம் ஏற்படலாம். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் வரும். இந்த நோயின் அறிகுறிகள் திடீர் என வரும்
அவை

  1. அதிகமான தண்ணீர் தாகம்
  2. அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்
  3. அளவுக்கு அதிகமான பசி
  4. அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறைவு
  5. கண் பார்வை மங்குதல்
  6. அதிக சோர்வு

இந்நோயை உடனடியாக கண்டுபிடித்து கட்டுப்படுத்தாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலைமை வர வாய்ப்புகள் உண்டு.