IPL 2022 - 15 ஆவது சீசன் மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி, மே 29 ஆம் திகதி நிறைவு

Prasu
4 years ago
IPL 2022 - 15 ஆவது சீசன் மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி, மே 29 ஆம் திகதி நிறைவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15 ஆவது சீசன் மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி, மே 29 ஆம் திகதி நிறைவடைகிறது.

ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு இதை தெரிவித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், மும்பை, நவி மும்பை, புணே ஆகிய 3 இடங்களில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்தார். லீக் ஆட்டங்கள் இங்கு நடைபெறும் நிலையில் பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இறுதி ஆட்டம் அகமதாபாதில் நடைபெறும் எனத் தெரிகிறது.

தொடக்க நிலையில் 40 சதவீதம் அளவுக்கு மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும், கரோனா சூழல் மட்டுப்படும் பட்சத்தில் மைதானத்தின் முழு கொள்ளளவுக்கும் ரசிகர்களை அனுமதிக்க பரிசீலிக்கப்படும் என்றும் பிரிஜேஷ் படேல் கூறினார்.

லீக் ஆட்டங்களில் மும்பையின் வான்கடே மற்றும் நவி மும்பையின் டிஒய் பாட்டில் மைதானங்களில் தலா 20 ஆட்டங்கள், மும்பையின் பிராபோர்ன் மற்றும் புணேவின் கஹுஞ்ஜே மைதானங்களில் தலா 15 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4