ரஷியா மீது இணையதள போர் - அடையாளம் தெரியாத ஹேக்கிங் குழு அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் முற்றிலுமாக நிலைகுலைந்துபோய் உள்ளது.
இந்த நிலையில் ரஷியாவின் மீது இணைய போரை தொடங்கியுள்ளதாக அடையாளம் தெரியாத ஹேக்கிங் குழு அறிவித்துள்ளது.
ரஷிய அரசுக்கு எதிரான இந்த சைபர் தாக்குதலில் முதற்கட்டமாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ‘ஆர்டி’ தொலைக்காட்சியின் கம்யூட்டர்களை ஹேக் செய்து செயல்பாடுகளை முடக்கியுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.