INDvsSL - இரண்டாவது T20 போட்டியில் இந்தியா அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

Prasu
4 years ago
INDvsSL - இரண்டாவது T20 போட்டியில் இந்தியா அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஷங்க 75 ஓட்டங்களையும் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4