ஊடகவியலாளர் நிமலராஜன் கொலைச் சந்தேக நபர் லண்டனில் கைது!

Keerthi
4 years ago
ஊடகவியலாளர் நிமலராஜன் கொலைச் சந்தேக நபர் லண்டனில் கைது!

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயதுடைய நபர் ஒருவர் லண்டன் Northamptonshire பகுதியில்வைத்து பிரித்தானிய பொலீஸாரின் போர்க் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி இந்தக் கைது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2000 ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பில் பல சிக்கலான விசாரணகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த விசாரணையின் தொடர்ச்சியாக லண்டனில் தாங்கள் ஒரு கைதினை மேற்கொண்டதாகவும் பிரித்தானிய பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் தங்களது விசாரணை வளையத்தில் அவர் நீடிப்பதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவில் பொலீஸார் மேற்கொண்டுள்ள முதலாவது கைது இது என்பது குறிப்பிடத்தக்கது.நிமலராசன் படுகொலை தொடர்பாக ஈ.பி.டிபி இயக்க நெப்போலியன் லண்டனில் கைது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4