இன்னும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

Prathees
4 years ago
இன்னும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

தற்போதைய மின்வெட்டை இன்னும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

நீர்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் போதுமான மழை பெய்து நீர்த்தேக்கங்கள் நிரம்பும் வரை மின்வெட்டு தொடர வேண்டும் எனத் தெரிவித்த அவர், அப்போதுதான் மின்வெட்டைக் குறைக்க முடியும் என்றார்.

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இரண்டு வாரங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளில் மே மாதத்தின் பின்னர் போதிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னர் சிறியளவிலான மழை பெய்த போதிலும் நீர்த்தேக்கங்கள் நிரம்புவதற்கு போதுமான மழை இல்லை எனவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4