BBQ அடுப்புடன் தூங்கச் சென்ற சுற்றுலாத் தம்பதியினர் மரணம்

Prathees
4 years ago
BBQ அடுப்புடன் தூங்கச் சென்ற சுற்றுலாத் தம்பதியினர் மரணம்

நுவரெலியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற தம்பதிகள் இன்று (27) காலை நுவரெலியா களுகேலே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து  குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்த தம்பதியினர்> குடும்ப உறுப்பினர்களுடன் (26) நள்ளிரவு வரை பார்பிக்யூ ஓவனில் இறைச்சியை வறுத்து சாப்பிட்டுவிட்டு, நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக பார்பிக்யூ அடுப்பை எடுத்துக்கொண்டு தம்பதியினர் தங்களது அறைக்கு சென்று உறங்கியுள்ளனர்.

58 மற்றும் 59 (27) வயதுடைய குறித்த  தம்பதியினர் 27ம் திகதி காலையில் எழுந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் தங்கியிருக்கும் அறையை குடும்ப உறுப்பினர்கள் திறந்து பார்த்த போது, அவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் பரிசோதனையின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4