கிழக்கில் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் கூட்டமைப்பின் மூன்று எம்.பிக்கள் பேச்சு!

Prasu
4 years ago
கிழக்கில் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் கூட்டமைப்பின் மூன்று எம்.பிக்கள் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம். பி., மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர்.கூட்டமைப்பு சார்பாக இதில் பங்கெடுத்தனர்.

முஸ்லிம் புத்திஜீவிகள் சார்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலியுடன் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. சர்ஜூன், தென்கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களான ரமீஸ் அப்துல்லா மற்றும் பௌசர் ஆகியோர் பங்கெடுத்தனர். 

மாலை 5 மணி தொடக்கம் மாலை 6.30  மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் - முஸ்லிம் உறவைப்  பலப்படுத்துவது, இரு இனங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு இணக்கத் தீர்வு எட்டுவது ஆகியன தொடர்பில் ஆராயப்பட்டன. 

இரு தரப்பினரும் விரைவில் மீண்டும் சந்தித்துப் பேசுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4