திங்கட் கிழமை சந்திர வழிபாடு நவக்கிரக சந்நிதியில் விளக்கு ஏற்றுவதன் மூலம் தொடங்குங்கள்.

#spiritual #God #Moon
திங்கட் கிழமை சந்திர வழிபாடு நவக்கிரக சந்நிதியில் விளக்கு ஏற்றுவதன் மூலம் தொடங்குங்கள்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் சந்திர பகவானை தரிசனம் செய்வதும், நவகிரக கோவில்களுக்கு சென்று சந்திரனுக்கு உரிய வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும். மேலும் சந்திர தரிசனம் செய்யக் கூடிய நாட்களில் அதாவது அமாவாசை முடிந்து மூன்றாம் பிறையில் சந்திர பகவானை வழிபட்டு வந்தால் மனதிலிருக்கும் பாரங்கள் குறையும்.

ஒவ்வொரு வாரமும் வரும் திங்கட்கிழமை அன்று நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வரலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர இந்த பரிகாரத்தை செய்யலாம். வழக்குகள, வம்புகள் போன்றவற்றில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள், தங்களுக்கு பிரியமானவர்களை இழந்தவர்கள், தோல்வியை கண்டு துவண்டு போய் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை. எல்லோருமே ஒரு கட்டத்தில் பிரிய தான் செய்வார்கள். அதற்காக மனம் வருந்திக் கொண்டே இருக்காமல் உங்களுக்காக வாழ்பவர்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மனதில் இருக்கும் உளைச்சல்கள், இறுக்கங்களை நீக்க திங்கட்கிழமை தோறும் சந்திர தரிசனம் செய்யுங்கள். நிலவொளியில் தியானம் செய்யுங்கள். வலது நாசியில் 4 வினாடிகளுக்கு காற்றை உள்ளே இழுத்து, இடது நாசியில் 8 வினாடிகளுக்கு காற்றை வெளியே மெதுவாக விட வேண்டும். இது போல 10 நிமிடங்கள் செய்யுங்கள். மனம் அமைதி அடையும். பௌர்ணமி நாட்களில் மொட்டை மாடியில் சென்று நிலாச்சோறு சாப்பிடுங்கள்.

சந்திரனுடைய முழு ஆதிக்கம் பெற்ற பவுர்ணமி தினத்தில் நிலாச்சோறு சாப்பிட்டால் மனதில் இருக்கும் குழப்பங்கள், அழுத்தங்கள் நீங்கும், மேலும் முக அழகு பொலிவாகிவிடும் என்கிறது ஜோதிடம்.

சந்திர பகவானை வழிபடும் பொழுது வெண்ணிற மலர்களை சாற்றி வழிபடுவது, வெண்மை நிறத்திலான நைவேத்யங்கள் படைத்து தானம் செய்வது, சந்திர பகவான் மந்திரங்களை உச்சரிப்பது போன்றவை செய்தால் நல்ல பலன்களை கொடுக்கும். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற உடை உடுத்திக் கொண்டு சந்திரனை வழிபட்டால் இன்னும் நிறைய நன்மைகள் நடக்கும். சந்திரன் ஜாதகத்தில் நீசம் அடைந்தவர்களுக்கு மனதில் நிம்மதி என்பதே இருக்காது. ஒரு பிரச்சினை போனால் அடுத்த பிரச்சினை தயாராக நிற்கும். வாழ்க்கையில் விரக்தி, சோகம், வெறுப்பு ஆகியவை உண்டாகும். அதிலிருந்து விடுபட சந்திர பகவான் வழிபாடு ஒன்றே போதும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4