இன்று மின்வெட்டு தொடர்பான அட்டவணை: 5 மணித்தியாலங்களுக்கு அதிகநேரம் மின் துண்டிப்பு

Mayoorikka
4 years ago
இன்று மின்வெட்டு தொடர்பான அட்டவணை:  5 மணித்தியாலங்களுக்கு அதிகநேரம் மின் துண்டிப்பு

நாட்டில் இன்றைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்று மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,Cஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்கள், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.


 
மின் துண்டிப்பின் எஞ்சிய 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள், மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4