வெயிலின் தாக்கத்தை குறைக்கவல்ல மூலிகை குடிநீர் உடலுக்கு பயனளிக்கவல்லது.

#Health #herbs #water
வெயிலின் தாக்கத்தை குறைக்கவல்ல மூலிகை குடிநீர் உடலுக்கு பயனளிக்கவல்லது.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் அதிகமான வியர்வை வெளியேறும். இதனால் நாம் வழக்கத்துக்கு மாறாக நிறைய தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும். அதுபோல நாம் குடிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருக்கவேண்டும்.

உடலுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதனால் குடிக்கும் தண்ணீர் மண்பானையில் இயற்கை மருத்துவம் பரிந்துரைக்கிற சில மூலிகைகளை போட்டு குடித்து வந்தால் ஏராளமான நன்மையைப் பெற்று கோடையை கொண்டாடலாம் என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான தீபா.

மிளகு, சீரகம், சோம்பு, வெட்டிவேர், நன்னாரி வேர், தேற்றாங்கொட்டை ஆகியவைகளை ஒரு துணியில் சேர்த்து கட்டி சுத்தம் செய்யப்பட்ட மண்பானை நீரில் போட வேண்டும். சுத்தமாக கழுவிய மண்பானையில் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் எடுத்து, அதில் 50 கிராம் வெட்டி வேர் மற்றும் 50 கிராம் நன்னாரி வேருடன்  10 கிராம் அல்லது இரண்டு தேக்கரண்டி அளவுக்கு சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து கட்டி மண்பானை நீரில் போட வேண்டும்.  

3 முதல் 4 மணி நேரம் ஊறிய பிறகு குளிர்ச்சியான நீராக மாறிவிடும். இந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அடைந்து நமக்கு எந்தவித நோய்களும் வராமல் உடலை காக்கும். ஏனெனில் நாம் இந்த தண்ணீரில் போடுகிற
ஒவ்வொரு மூலிகைப் பொருளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. உடல்நலம் காக்க மிகவும் தேவையானவை.

வெட்டி வேர்

இது உடலை குளிர்ச்சியடைய வைக்கிற ஒரு மூலிகை பொருளாகும். நரம்பு மண்டலத்திற்கு குளிர்ந்த தன்மையைத் தருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது. அத்தோடு குழந்தைகளுக்கு இரண்டு தேக்கரண்டி வரை இதனை கொடுத்து வந்தால் கோடையில் ஏற்படும் அம்மை தொற்று நோய் வராமல் எதிர்க்கவும் முடியும்.

 இந்த குளிர்பானத்தில் Anti inflammatory property நிறைந்திருப்பதால் நமது சருமத்தினை சுத்திகரிப்பதோடு உடலையும் சுத்தம் செய்கிறது. கோடையில் ஏற்படும் சிறுநீர் தொற்றுநோய் மற்றும் எரிச்சல் ஆகியவற்றையும் தடுக்கிறது. உடலின் நீர்ச்சத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும்  உதவுகிறது. நீர்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் தலைவலி காய்ச்சல் பிரச்னைகளிலிருந்து காக்கிறது.

மேலும், குடலில் முழுக்கழிவுகளையும் அகற்றி ஜீரண மண்டலத்தை நன்றாக பாதுகாக்கிறது. குடல் ஓட்டத்தையும் (Bowel movement) பாதுகாப்பதனால் மலச்சிக்கல் பிரச்னைகளையும் தவிர்க்கிறது.

சீரகம், சோம்பு

சீரகம், சோம்பு இவற்றின் காரச்சுவை உடலுக்கு மிகவும் தேவை. அதில் நார்ச்சத்தும் அடங்கியுள்ளது. காரச்சுவையானது ஜீரணத்தன்மை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. காரத்தன்மையானது உடலின் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இந்த பானம் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்வதால் ஜீரணச்சக்தி சர்க்கரை அளவு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

அதனோடு ரத்தக் கொழுப்பின் அளவையும் கட்டுப்பாட்டில் வைப்பதால் அதன் வாயிலாக ஏற்படும் இதய நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். சோம்பு, சீரகம் மிளகில் அதிகமான மினரல்ஸ் காணப்படுகிறது. பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி சேர்ந்த கலவையாக இருப்பதால் இதனை ஒரு packed mixed juice எனலாம்.

இந்த குளிர்ந்த பானம் உடலின் கழிவுகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிப்செய்கிறது. அதனால் இந்த பானம் தினமும் பருகிவந்தால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்கள் உடலுக்கு சீராக கிடைக்கவும் உதவுகிறது.

வேர்கள் கலந்து இந்த பானத்தை எடுத்து கொள்ளும்போது கோடையில் ஏற்படும் வியர்வை. உடல் துர்நாற்றத்தில் கொண்டுவிடாமல் தடுக்கும் துர்நாற்றம் வராமல் தவிர்க்க முடியும். உடல் வியர்வையால் ஏற்படும் அரிப்பு Fungal infection ஆகியவற்றில் பாதுகாத்து தோலையும் உடலையும் பாதுகாக்கிறது.

தேற்றாங்கொட்டை

தேற்றாங்கொட்டையில் காணப்படும்(Sapenin) என்கிற வேதிப்பொருளானது கோடையில் ஏற்படும் தோல் பிரச்னைகளிலிருந்து எலும்புகளில் ஏற்படும் மூட்டுவாதப் பிரச்னைகளிலிருந்தும் பாதுகாக்கும் (Saponin) கெமிக்கலில் ஒரு முக்கிய Ceroid உள்ளது இது Sarsaponin எனப்படுகிறது. இந்த பானத்தில் Sarsaponin கெமிக்கல் உள்ளதால். இது சொரியாஸிஸ் நோய்க்கு மருந்தாக அமைகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதோடு சொரியாஸிஸ் நோய்க்கு மட்டுமல்லாமல் மூட்டு வாதத்திற்கும் மருந்தாக அமைகிறது.

நன்னாரி வேர்

இது வெயில் காலத்துக்கு ஏற்ற ஒரு மூலிகையாகும். வெயில் காலத்தின் அசதியை போக்குகிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. அதை முழுவதுமாக நீக்கிறது. மூலம், மலக்குடல் புண் போன்றவற்றை ஆற்றுகிறது. அசிடிட்டி பிரச்னையை போக்குகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடலில் அனைத்து உறுப்புகளின் பிரச்சனைகளை போக்கி அதன் இயக்கத்தை தூண்டுகிறது. சிறுநீரக எரிச்சலை போக்குகிறது. நுரையீரல் சம்பந்தபட்ட அலர்ஜியை போக்குறிகது. வாத நோய்க்கு மருந்தாகவும் அமைகிறது.

மிளகு

மிளகில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் அடங்கி யிருக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதய துடிப்பினை சீராக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீரான நிலைக்கு கொண்டு வருகிறது. மசாலா காரம் குறைத்து இதில் வைட்டமின் சத்தும் நிறைந்து இருக்கிறது.

மொத்தத்தில் இவ்வாறு குடிநீரை நாம் பயன்படுத்தும்போது இரைப்பையில் ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் உற்பத்தி அளவை சீராக்கி குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீரமைக்கிறது. அதனால் ஏற்படும் சரும நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்த குளிர்பானத்தை தினமும் எடுத்துக்கொண்டால் உடலோடு மனதையும் குளிர்ச்சியடையச் செய்யும், மூளையில் Serotonin தூண்டப்பட்டு மன அழுத்தத்தை குறைத்து கோடையின் வெயிலிருந்து நம்மை உற்சாகப்படுத்துகிறது. தலை முடி வளர்வதற்கு உதவுகிறது, எலும்பு மூட்டு வலி, உடல் வலி போன்ற வலிகளுக்கு நல்ல நிவாரணியாக இருக்கிறது.

இந்த மூலிகை குடிநீரை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற உடலில் பிரச்னை இருப்பவர்களுக்கும் இது அருமருந்து. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மட்டும் தேன் கலந்து கொடுப்பது நல்லது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!