திருகோணமலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Prathees
4 years ago
திருகோணமலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கும்புறுபிட்டி தெற்கு பழைய ஆர்.டி.எஸ். அலுவலக வீதிக்கு அருகில் இன்று (28)  சடலமொன்று காணப்பட்டதையடுத்து  பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குச்சவெளி கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா பாலகுமார (46வயது) எனவும் தெரியவருகின்றது.

கடற்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட உள்ளத்துடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4