நூறு கோடி வசூல் ஈட்டிய வலிமை, ஆனால் வடநாட்டில் வசூல் மிக மிக குறைவு.

Reha
4 years ago
நூறு கோடி வசூல் ஈட்டிய வலிமை, ஆனால் வடநாட்டில் வசூல் மிக மிக குறைவு.

வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. ஏற்கனவே நூறு கோடி வசூலை தொட்டுவிட்டது இந்த படம். ஐந்தாவது நாளில் 150 கோடி என்ற மைல்கல்லை வலிமை கடந்துவிட்டது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நல்ல வசூல் வந்தாலும், போனி கபூர் அதிகம் எதிர்பார்த்தது ஹிந்தி டப்பிங் வசூல் தான். ஆனால் வடநாட்டில் வலிமை வசூல் மிக மிக குறைவு தான்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் 100 கோடிக்கும் அதிகமாக ஹிந்தியில் வசூலித்ததால் போனி அதிக எதிர்பார்ப்பில் வலிமையை வடநாட்டில் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். ஆனால் வசூல் மிக மிக குறைவாக தற்போது வரை வெறும் 3 கோடி மட்டுமே வரை வந்திருப்பதாக கூறப்படுகிறது.  அதனால் வலிமை ஹிந்தி டப்பிங்கில் 5 கோடி வசூலித்தல் ஆச்சர்யம் தான் என ஹிந்தி மீடியாக்களில் செய்தி வந்திருக்கிறது.

மேலும் தெலுங்கிலும் பவர் ஸ்டாரின் பீம்லா நாயக் படம் வந்ததால் வலிமை வசூல் மிக மிக குறைவாகவே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4